நியூசிலாந்து vs இலங்கை, முதல் டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
New Zealand vs Sri Lanka 1st T20I Dream11 Prediction: இலங்கை அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நாளை முதல் தொடங்கவுள்ளது.
அதன்படி நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்கு முன் இவ்விரு அணிகளுக்கும் இடையே கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து தொடரை சமன்செய்தன. மேலும் இம்முறையும் இரு அணிகளும் சரிக்கு சமமாக மோதுவார்கள் என்பதால் நிச்சயம் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. இதன் காரணமாக இத்தொடரில் எந்த அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Trending
NZ vs SL 1st T20I: போட்டி தகவல்கள்
மோதும் அணிகள்: நியூசிலாந்து vs இலங்கை
நேரம்: டிசம்பர் 28, காலை 11.30 மணி (இந்திய நேரப்படி)
இடம்: பே ஓவல் மைதானம், மவுண்ட் மவுங்கானுய்
NZ vs SL 1st T20I Live Streaming Details
நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான இந்த தொடரை இந்தியாவில் சோனி ஸ்போர்ட் நெட்வர்க் தொலைகாட்சிகளில் நேரலையில் காணலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் சோனி லிவ், அமேசான் பிரைம் மற்றும் ஃபேன் கோட் செயலிகளில் நேரலையில் காணலாம.
NZ vs SL: Head-to-Head In T20Is
- Total Matches: 25
- New Zealand: 14
- Sri Lanka: 10
- No Result: 1
NZ vs SL: Ground Pitch Report
இப்போட்டி நடைபெறும் பே ஓவல் மைதானம் வரலாற்றில் பேட்டர்களுக்கு சாதகமாக இருந்துள்ளது. ஏனெனில் இங்குள்ள பவுண்டரி எல்லைகள் சிறியது என்பதால் நிச்சயம் வான வேடிக்கைகளுக்கு பஞ்சமிருக்காது. மேற்கொண்டு இந்த மைதானத்தில் இதுவரை 17 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் அதில் முதலில் பேட்டிங் செய்த அணி 11 முறையும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 3 முறையும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேலும் இந்த மைதானத்தில் அதிகபட்சமாக ஒரு இன்னிங்ஸில் 243 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளதால் நிச்சயம் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. மேலும் இப்போட்டியில் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.
New Zealand vs Sri Lanka Possible XIs
நியூசிலாந்து உத்தேச லெவன்: டிம் ராபின்சன், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, மைக்கேல் பிரேஸ்வெல், டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், பெவோன் ஜேக்கப்ஸ், நாதன் ஸ்மித், மேட் ஹென்றி, ஜேக்கப் டஃபி
இலங்கை உத்தேச லெவன்: பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், குசால் பெரேரா, சரித் அசலங்கா (கேப்டன்), கமிந்து மெண்டிஸ், வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, ஜெஃப்ரி வான்டர்சே, மதீஷா பத்திரன, அசித்த ஃபெர்னாண்டோ, நுவான் துஷார
NZ vs SL: Dream11 Team
- விக்கெட் கீப்பர்கள்: குசால் மெண்டிஸ், கிளென் பிலீப்ஸ்
- பேட்டர்ஸ்: பதும் நிஷங்கா, டிம் ராபின்சன், குசால் பெரேரா(துணைக்கேப்டன்), ரச்சின் ரவீந்திரா
- ஆல்-ரவுண்டர்கள்: மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), டேரில் மிட்செல், வநிந்து ஹசரங்கா
- பந்துவீச்சாளர்கள்: மதீஷா பதிரானா, மேட் ஹென்றி
NZ vs SL 1st T20I Dream11 Prediction, NZ vs SL Dream11 Prediction, Today Match NZ vs SL, NZ vs SL Series, NZ vs SL Dream11 Team, Fantasy Cricket Tips, ZIM vs AFG Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between New Zealand vs Sri Lanka
Also Read: Funding To Save Test Cricket
Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.
Win Big, Make Your Cricket Tales Now