Advertisement

மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: நியூசிலாந்து vs இலங்கை - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 15ஆவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Advertisement
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: நியூசிலாந்து vs இலங்கை - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: நியூசிலாந்து vs இலங்கை - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Cricketnmore)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 11, 2024 • 06:54 PM

New Zealand Women vs Sri Lanka Women, Match 15 ICC Women's T20 World Cup 2024 Dream11 Prediction: ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Bharathi Kannan
By Bharathi Kannan
October 11, 2024 • 06:54 PM

இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 15ஆவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் இலங்கை மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கு இடையேயான இப்போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணி விளையாடிய 2 போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியை பதிவுசெய்துள்ளது. அதேசமயம் இலங்கை அணி விளையாடிய 3  போட்டிகளிலும் தோல்வியைச் சந்திது அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்துள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. 

Trending

NZ-W vs SL-W Match 15: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - நியூசிலாந்து மகளிர் vs இலங்கை மகளிர்
  • இடம் - சார்ஜா கிரிக்கெட் மைதானம், துபாய்
  • நேரம் - அக்.12 மாலை 3.30 மணி (இந்திய நேரப்படி)

NZ-W vs SL-W Match 15: Ground Pitch Report

நியூசிலாந்து - இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையேயான இப்போட்டி போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை இங்கு மொத்தம் 55 டி20 போட்டிகள் நடந்துள்ளன, இதில் முதலில் பேட்டிங் செய்த அணி 32 முறையும், சேஸிங் செய்த அணி 23 முறையும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேற்கொண்டு இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 140 ரன்களாக உள்ளது. மேலும் இந்த மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 215 ரன்கள் இருப்பதால், நிச்சயம் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

NZ-W vs SL-W Match 15: Head-to-Head 

  • மோதிய போட்டிகள் - 13
  • நியூசிலாந்து மகளிர் அணி - 12
  • இலங்கை மகளிர் அணி - 01
  • முடிவில்லை - 00

NZ-W vs SL-W Match 15: Live Streaming Details

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுக்களிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் இத்தொடரை டிஸ்னி பிளர் ஹாட் ஸ்டாரில் நேரலையில் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

New Zealand Women vs Sri Lanka Women Possible XIs

நியூசிலாந்து மகளிர் அணி: சுசி பேட்ஸ், ஜார்ஜியா பிளிம்மர், அமெலியா கெர், சோஃபி டிவைன் (கே), ப்ரூக் ஹாலிடே, மேடி கிரீன், இசபெல்லா கேஸ், ரோஸ்மேரி மெய்ர், ஃபிரான் ஜோனாஸ், லியா தஹுஹு, ஈடன் கார்சன்

இலங்கை மகளிர் அணி: விஷ்மி குணரத்ன, சாமரி அத்தபத்து (கே), ஹர்ஷிதா சமரவிக்ரம, கவிஷா தில்ஹாரி, நிலக்ஷி டி சில்வா, அனுஷ்கா சஞ்சீவனி, அமா காஞ்சனா, சுகந்திகா குமாரி, இனோஷி பிரியதர்ஷனி, உதேஷிகா பிரபோதனி, இனோகா ரணவீர.

NZ-W vs SL-W Match 15: Dream11 Team

விக்கெட் கீப்பர்: அனுஷ்கா சஞ்சீவனி
பேட்டர்ஸ்: நிலக்ஷி டி சில்வா (துணைக்கேப்டம்), சூஸி பேட்ஸ், இசபெல்லா கேஸ், மேடி கிரீன்
ஆல்-ரவுண்டர்கள்: சோஃபி டிவைன், அமெலியா கெர் (கேப்டன்), சமாரி அத்தபத்து
பந்து வீச்சாளர்கள்: சுகந்திகா குமாரி, ஜெஸ் கெர், ரோஸ்மேரி மெய்ர்

NZ W vs SL W T20I Dream11 Prediction, NZ W vs SL W Dream11 Team, Fantasy  Cricket Tips, NZ W vs SL W Pitch Report, Today Cricket Match Prediction, Today Match Prediction, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between New Zealand Women vs Sri Lanka Women

Also Read: Funding To Save Test Cricket

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement