
Cricket Image for ஐபிஎல் 2021: ஆர்சிபி அணியிலிருந்து ஆஸி.வீரர் விலகல்; நியூ. வீரர் சேர்ப்பு! (Image Source: Google)
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியில் அறிமுகமாகிய ஜோஸ் பிலிப், 5 போட்டிகளில் 78 ரன்கள் சேர்த்தார். இப்போது பிலிப்புக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ள நியூஸிலாந்து வீரர் ஃபின் ஆலன் இதுவரை சர்வதேச போட்டியில் அறிமுகமாகாவிட்டாலும், 12 முதல் தரப்போட்டிகளில் விளையாடி 3 அரை சதங்களை விளாசியுள்ளார்.
ஆஸ்திரேலிய வீரர் ஜோஸ் பிலிப் ரூ.20 லட்சத்துக்கு ஆர்சிபி அணியால் வாங்கப்பட்டிருந்தார். அதே விலைக்கு ஃபின் ஆலன் வாங்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து ஆர்சிபி அணி வெளியிட்ட அறிவிப்பில், “ ஆஸ்திரேலிய வீரர் ஜோஸ் பிலிப்பால் 14வது சீசன் ஐபிஎல் தொடரில் முழுமையாக விளையாட முடியாத சூழலில் இருப்பதாகத் தெரிவித்தார். இதையடுத்து, அவருக்குப் பதிலாக நியூஸிலாந்து விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேன் ஃபின் ஆலன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளது.