
NZ's BJ Watling To Retire After WTC Final Against India (Image Source: Google)
நியூசிலாந்து அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பிஜே வாட்லிங். கடந்த 2009 ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்கு அறிமுகமான வாட்லிங், இதுவரை 73 டெஸ்ட், 28 ஒருநாள், 5 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 10 ஆயிரம் ரன்களை குவித்துள்ளார்.
தற்போது 35 வயதாகும் வாட்லிங், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய வாட்லிங், “இதுதான் சரியான நேரம் என நினைக்கிறேன். நியூசிலாந்து அணிக்கு விளையாடியது மிகப்பெரும் கவுரமாக கருதுகிறேன். இதில் நியூசிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதை பெருமையாக கருதுகிறேன்” என்று தெரிவித்தார்.