Advertisement

மீண்டும் எனது பழைய ஃபார்முக்கு திரும்புவேன் - ராஸ் டெய்லர் நம்பிக்கை!

காயத்திலிருந்து மீண்டு நியூசிலாந்து அணிக்காக தேர்வாகியுள்ள ராஸ் டெய்லர், மீண்டும் தனது பழைய ஃபார்முக்கு திரும்புவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்

Bharathi Kannan
By Bharathi Kannan May 18, 2021 • 21:40 PM
NZ's Ross Taylor Confident Of Overcoming Calf Strain Before Tests In England
NZ's Ross Taylor Confident Of Overcoming Calf Strain Before Tests In England (Image Source: Google)
Advertisement

கரோனா பரவல் காரணமாக ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் மீது தற்போது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர். 

Trending


இந்நிலையில் காயத்திலிருந்து மீண்டு நியூசிலாந்து அணிக்காக தேர்வாகியுள்ள ராஸ் டெய்லர், மீண்டும் தனது பழைய ஃபார்முக்கு திரும்புவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய டெய்லர்,“வெளிப்படையாகக் கூற வேண்டும் என்றால் நான் காயத்திலிருந்து மீண்டு வந்துள்ளது எனக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் சர்வதேச கிரிக்கெட் வீரராக நீங்கள் இருக்கும் பட்சத்தில் இது போன்ற சூழலை சமாளித்து வருவது இயல்பான ஒன்றுதான்.

ஆனால் காயத்தில் இருந்து மீண்ட பிறகு நீங்கள் உங்களது திறனை வெளிக்காட்டுவது மிகவும் அவசியம். நானும் அப்படி தான்.  வரவுள்ள இங்கிலாந்து மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளில் எனது திறனை வெளிப்படுத்தி மீண்டும் எனது ஃபார்முக்கு திரும்புவேன்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement