Advertisement

8 ஆண்டுகளுக்கு முன்பு செய்த சம்பவத்திற்கு தற்போது தடை விதிக்கப்பட்ட வீரர்!

8 ஆண்டுகளுக்கு முன் சர்ச்சைகுரிய கருத்துகளை ட்விட்டரில் பதிவிட்டதாக இங்கிலாந்து அறிமுக வீரர் ஒல்லி ராபின்சன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement
Ollie Robinson suspended from all international cricket
Ollie Robinson suspended from all international cricket (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 07, 2021 • 11:43 AM

இங்கிலாந்து - நியூசிலாந்து இடையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தியது.

Bharathi Kannan
By Bharathi Kannan
June 07, 2021 • 11:43 AM

முதல் இன்னிங்சில் அந்த அணி 378 ரன்களை குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரரான டேவான் கான்வே 200 ரன்கள் அடித்து அறிமுக போட்டியிலேயே அசத்தினார். 

Trending

மேலும் இங்கிலாந்து அணி சார்பாக அறிமுக வீரரான ஒல்லி ராபின்சன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

பந்துவீச்சில் ஸ்விங் மற்றும் பவுன்சர் போன்றவற்றைச் சிறப்பாக வீசி ஒல்லி ராபின்சன் இங்கிலாந்து ரசிகர்களை வியக்க வைத்தார். இதனால், இணையத்தில் ராபின்சன் குறித்த பேச்சுக்கள் அதிகரித்தன. ஒரு சிலர் இங்கிலாந்து அணியின் எதிர்கால நட்சத்திர வீரர் என புகழ்ந்து தள்ளினர். ஆனால் அந்த புகழ்ச்சிகள் அன்றைய தினம் மாலை வரை கூட நிலைக்கவில்லை. இதற்கு காரணம் அவர் 8 ஆண்டுகளுக்கு முன்பு போட்ட ட்வீட் தான் தான் என தெரியவந்தது.

8 வருடங்களுக்கு முன்பு சில ட்வீட்களை வெளியிட்டிருந்த ராபின்சன், அதில் இனவெறியை தூண்டும் விதமாகவும், பாலியல் ரீதியாக சில வார்த்தைகளையும் பதிவு செய்திருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் பலர் இனவெறி பிடித்த ராபின்சனை அணியிலிருந்து உடனே நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதுதொடர்பாக, ராபின்சன் கூறிய விளக்கத்தை ஏற்காத இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் அவரது இந்த ட்வீட்டுகள் குறித்து நடவடிக்கை எடுக்க சில ஆய்வுகளையும் மேற்கொண்டது. 

இந்நிலையில், ஒல்லி ராபின்சன் ட்வீட் போட்டது உறுதியாகி உள்ளதால் அவரது மன்னிப்பை நிராகரித்து அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து  இடைநீக்கம் செய்யப்பட்டார். அவர் 7 மாதங்களுக்கு கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement