
OMN vs IRE: Ireland beat Oman by 9 wickets (Image Source: Google)
ஓமனில் நான்கு அணிகள் பங்கேற்கும் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் ஓமன், அயர்லாந்து, நேபாள், ஐக்கிய அரபு அணிகள் விளையாடுகின்றன.
இதில் இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் ஓமன் - அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஓமன் அணி 19.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்களை மட்டுமே எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக சோயிப் கான் 57 ரன்களைச் சேர்த்தார். அயர்லாந்து அணி தரப்பில் மார்க் அதிர், சிமி சிங் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.