
இங்கிலாந்து நாடு தற்போது தி ஹண்ட்ரட் என்ற புது வகையான கிரிக்கெட் வடிவத்தை கடந்த வருடத்திலிருந்து அறிமுகப்படுத்தி நடத்தி வருகிறது. இந்த வருடத்திற்கான தி 100 போட்டித் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது . இதில் ஜோஸ் பட்லர் தலைமையிலான மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணி மற்றும் சாம் பில்லிங்ஸ் தலைமையிலான ஓவல் இன்வின்சிபில்ஸ் ஆகிய அணிகள் தகுதி பெற்றன . லண்டன் நகரில் அமைந்துள்ள பிரபலமான லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணியின் கேப்டன் பட்லர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் களம் இறங்கிய ஓவல் இன்விசிபில் அனையினருக்கு துவக்கமே அதிர்ச்சி அளிக்கும் விதமாக இருந்தது . ஒரு கட்டத்தில் அந்த அணியினர் 36 பந்துகளில் 34 ரன்கள் மட்டுமே எடுத்து ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தனர். அப்போது ஜோடி சேர்ந்த ஓவல் இன்விசிபில் அணியின் ஆல்ரவுண்டர்களான டாம் கரண் மற்றும் ஜிம்மி நீஷம் இருவரும் அதிரடியாக விளையாடி தங்களது அணியை சரிவிலிருந்து மீட்டனர் . மேலும் வலுவான ஒரு வெற்று இலக்கை நிர்ணயிப்பதற்கும் இவர்களது ஆட்டம் கை கொடுத்தது.
இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய டாம் கரன் இந்த போட்டியிலும் 34 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் நான்கு பவுண்டரிகளுடன் 67 ரன்கள் எடுத்து ஆட்டம் விளக்காமல் இருந்தார். இவருக்கு இணையாக விளையாடிய ஜிம்மி நீஷம் 33 பந்துகளில் ஏழு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் உடன் 57 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார் . இவர்கள் இருவரது அதிரடி ஆட்டத்தால் ஓவல் இன்விசிபில் அணியினர் 100 பந்துகளில் 161 ரன்களைச் சேர்த்தது.