
Pacer Prasidh Krishna Recovers, To Join India Cricket Team On May 23 (Image Source: Google)
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரசீத் கிருஷ்ணா. மேலும் இவர் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்நிலையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் போது பயோ பபுளில் இருந்த பிரசீத் கிருஷ்ணாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இதற்கிடையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியில் இவர் இடம் பிடித்திருந்தார். ஆனால் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர், இந்திய அணியுடன் இங்கிலாந்து செல்வாரா என்ற சந்தேகம் எழுந்திருந்தது.