
PAK v AUS 1st Test: Usman Khawaja Misses Out On 100; Bad Light & Rain Cause Early Stumps On Day 2 (Image Source: Google)
பாகிஸ்தான் - ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 476 ரன்களில் டிக்ளர் செய்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு உஸ்மான் கவாஜா - டேவிட் வார்னர் இணை அபாரமான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர்.
அதன்பின் 68 ரன்களில் வார்னர் ஆட்டமிழக்க, சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட உஸ்மான் கவாஜா 97 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.