Advertisement

PAK vs AUS, 3rd Test: அப்துல்லா, அசார் நிதான ஆட்டம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களைச் சேர்த்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan March 23, 2022 • 13:15 PM
PAK vs AUS, 3rd Test: Abdullah Shafique and Azhar Ali continue to grind out the runs for the hosts
PAK vs AUS, 3rd Test: Abdullah Shafique and Azhar Ali continue to grind out the runs for the hosts (Image Source: Google)
Advertisement

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளும் டிராவில் முடிந்த நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி லாகூரில் நேற்று தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடியது. அதன்படி களமிறங்கிய அந்த அணி 391 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

Trending


அந்த அணியில் அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 91 ரன்களையும், கேமரூன் க்ரீன் 79 ரன்களையும் சேர்த்தனர். அபாரமாக பந்துவீசிய பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் ஷாஹீன் அஃப்ரிடி மற்றும் நசீம் ஷா ஆகிய இருவரும் அதிகபட்சமாக தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணி தொடக்கத்திலேயே இமான் உல் ஹக் விக்கெட்டை இழந்தது. அதன்பின் ஜோடி சேர்ந்த அப்துல்லா ஷஃபிக் - அசார் அலி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 90 ரன்களைச் சேர்த்துள்ளது. பாகிஸ்தான் தரப்பில் அப்துல்லா ஷஃபிக் 45 ரன்களையும், அசார் அலி 30 ரன்களையும் சேர்த்துள்ளனர். 

இதையடுத்து 301 ரன்கள் பின் தங்கிய நிலையில் பாகிஸ்தான் அணி மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அப்துல்லா ஷஃபிக், அசார் அலி இருவரும் அரைசதம் கடந்தனர். 

இதன்மூலம் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் அப்துல்லா ஷஃபிக் 75 ரன்களுடனும், அசார் அலி 63 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement