
பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளும் டிராவான நிலையில், 3வது டெஸ்ட் போட்டி லாகூரில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 391 ரன்கள் அடித்தது. தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா அபாரமாக பேட்டிங் ஆடி 91 ரன்கள் அடித்தார். ஸ்மித் 59 ரன்கள் அடித்தார். அதன்பின்னர் அலெக்ஸ் கேரி 67 ரன்களையும், கேமரூன் க்ரீன் 79 ரன்களையும் குவித்தனர்.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி, 2aஅம் நாளில் 39 ஓவர்கள் பேட்டிங் ஆடியது. பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் மற்றொரு தொடக்க வீரர் அப்துல்லா ஷாஃபிக்கும், அவருடன் ஜோடி சேர்ந்த அசார் அலியும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.