PAK vs AUS (Day 5, Lunhch): 459 ரன்னில் ஆஸி ஆல் அவுட்; டிராவை நோக்கி ராவல்பிண்டி டெஸ்ட்!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 459 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் 4 விக்கெட் இழப்புக்கு 476 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அசார் அலி 185 ரன்னிலும், இமாம் உல் ஹக் 157 ரன்னிலும் வெளியேறினர்.
Trending
தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர். வார்னர் 68 ரன்னிலும், உஸ்மான் கவாஜா 97 ரன்னிலும் வெளியேறினர். 3-ம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்தது. லபுஸ்சனே 69 ரன்னுடனும், ஸ்டீவ் ஸ்மித் 24 ரன்னுடமும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட லபஷாக்னே 90 ரன்னில் வெளியேறினார். ஸ்மித் 78 ரன்னில் அவுட்டானார். கேமரூன் கிரீன் 48 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், நான்காம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் இழப்புக்கு 449 ரன்கள் எடுத்தது. அதன்பின் 27 ரன்கள் பின் தங்கிய நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்க் 13 ரன்னுடனும், பாட் கம்மின்ஸ் 8 ரன்னுடனும் ஆட்டமிழந்தனர்.
இதனால் 259 ரன்களில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பாகிஸ்தான் தரப்பில் நௌமன் அலி 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பின்னர் 17 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியுள்ள பாகிஸ்தான் அணி, உணவு இடைவேளையின் போது விக்கெட் இழப்பின்றி 76 ரன்களைச் சேர்த்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now