இது எங்கள் குழு முயற்சிக்கு கிடைத்த வெற்றி - பாபர் ஆசாம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் கிடைத்த வெற்றியானது எங்கள் குழு முயற்சிக்கு கிடைத்த வெற்றி என பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி லாகூரில் நேற்று நடந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 348 ரன்கள் குவித்தது. இதில் பென் மெக்டர்மாட் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். பாகிஸ்தான் சார்பில் ஷஹின் அப்ரிடி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Trending
இதையடுத்து, 349 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி பாகிஸ்தான் ஆடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக், கேப்டன் பாபர் அசாம் அதிரடியாக விளையாடி சதமடித்தனர். இதில் இமாம் உல் ஹக் 106 ரன்னிலும், பாபர் அசாம் 114 ரன்னிலும் அவுட்டாகினர். பஹர் சமான் 67 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், பாகிஸ்தான் 49 ஓவரிலேயே 4 விக்கெட்டுக்கு 352 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை பாகிஸ்தான் அணி 1-1 என்ற சமன் செய்துள்ளது.
இந்நிலையில் இப்போட்டி குறித்து பேசிய பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம், “பாசிட்டிவாக பேட்டிங் செய்து பார்ட்னர்ஷிப் அமைப்பது தான் எங்கள் திட்டம். கையில் விக்கெட்கள் இருக்கும்போது, அது இறுதியில் எளிதாகிவிடும் மற்றும் தேவையான விகிதத்தில் எந்த அழுத்தமும் இருக்காது. நாங்கள் 20 ரன்கள் அதிகமாக கொடுத்தோம், அடுத்த ஆட்டத்தில் சிறப்பாக செயல்படுவோம் என்று நம்புகிறேன்.
மேலும் இது எனது சொந்த ஊர், இது எனக்கும் அணிக்கும் பெருமையான தருணம். அணியின் ஒட்டுமொத்த முயற்சி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த முறை எங்களால் அதைத் துரத்த முடியவில்லை, ஆனல் இன்று இது ஒரு முழுமையான குழு முயற்சிக்கு கிடைத்த வெற்றி” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now