
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்றுவருகிறது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்க இத்தொடரின் சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் அணிகள் முன்னேறின. அதேசமயம் ஆஃப்கானிஸ்தான் மற்றும் நேபாள் அணிகள் லீக் சுற்றோடு வெளியேறினர்.
இந்நிலையில் இத்தொடரின் சூப்பர் 4 சுற்று இன்று தொடங்கியது. இதில் இன்று நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அதன்படி லாகூரிலுள்ள கடாஃபி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து அந்த அணியின் தொடக்க வீரர்களாக முகமது நயிம், மெஹிதி ஹசன் களமிறங்கினர். ஹசன் ரன் எதுவும் எடுக்காமலும், நயிம் 20 ரன்னிலும் அவுட் ஆகினர். பின்னர் வந்த வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர்.