
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கு தயாராவதற்கான கடைசி கட்ட போட்டிகளில் அனைத்து அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.
ஒருபுறம் இந்திய அணி ஆஸ்திரேலியாவுடனான டி20 தொடரை கைப்பற்றிய சூழலில் அடுத்ததாக தென்னாப்பிரிக்க தொடரில் பங்கேற்கிறது. மற்றொரு புறம் இந்தியாவின் பரம எதிரியான பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணியுடன் 7 டி20 போட்டிகள் கொண்ட நெடுந்தொடரில் பங்கேற்றுள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் தான் பெரும் பின்னடைவை பாகிஸ்தான் சந்தித்துள்ளது.
பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக பார்க்கப்படும் நஷீம் ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இங்கிலாந்து தொடரின் போது நசீம் ஷாவுக்கு தொடர்ச்சியாக உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. அவரை பரிசோதனை செய்து பார்த்தபோது காய்ச்சல் இருப்பதாகவும், ஆனால் அது சாதாரணமான ஒன்று அல்ல எனவும் கண்டறிந்தனர்.