
PAK vs ENG, 6th T20I: Pakistan Needs To Defend 169 To Seal The Series! (Image Source: Google)
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்துவரும் இங்கிலாந்து அணி 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இதுவரை நடந்து முடிந்த 5 போட்டிகளில் மூன்றில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று 3-2 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஆறாவது டி20 போட்டி இன்று லாகூரில் உள்ள கடாஃபி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான அணியில் இன்றைய தொடக்க வீரராக களமிறங்கிய முகமது ஹாரிஸ் 7 ரன்களிலும், ஷான் மசூத், ஹைதர் அலி ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.