Advertisement

PAK vs NEP, Asia Cup 2023: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Advertisement
PAK vs NEP Asia Cup 2023: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
PAK vs NEP Asia Cup 2023: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: CricketNmore)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 29, 2023 • 08:19 PM

நடப்பாண்டு ஆசிய கோப்பை இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. ஆசியக் கோப்பையில், 6 அணிகள் தலா 2 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, குரூப்-ஏவில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபாளமும், குரூப்-பியில் வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளும் உள்ளன. இதில் நாளை நடைபெறும் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

Bharathi Kannan
By Bharathi Kannan
August 29, 2023 • 08:19 PM

போட்டி தகவல்கள்

Trending

  • மோதும் அணிகள் - பாகிஸ்தான் vs நேபாளம்
  • இடம் - முல்தான் கிரிக்கெட் மைதானம், பாகிஸ்தான்
  • நேரம் - மாலை 3 மணி (இந்திய நேரப்படி)

போட்டி முன்னோட்டம்

சமீபத்தில் நடந்த ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் 3-0 என்ற கணக்கில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தியது. பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியில் ஃபகார் ஜமான் இமாம் உல் ஹக், முகமது ரிஸ்வான், இஃப்திகார் அஹ்மது, ஆகா சல்மான், ஆகியோரு பேட்டிங்கில் பலமாக உள்ளனர். பந்துவீச்சில் ஷாஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ராவுஃப், நசீம் ஷா, ஷதாப் கான், முகமது நவாஸ் ஆகியோரும் இருப்பதும் பாகிஸ்தான் அணியின் மிகப்பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.

 அதேசமயம் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற்ற ஏசிசி பிரீமியர் தொடரில் நேபாளம் அணி சிறப்பாக செயல்பட்டது. அந்த அணி இறுதிப் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதே உத்வேகத்துடன் தற்போது நேபாளம் அணி இந்த ஆசிய கோப்பை தொடரை எதிர்கொள்ளவுள்ளது. 

நேபாளம் அணியின் பேட்டிங்கில் குசால் புர்டெல், அசிஃப் ஷேக், ரோஹித் படேல், குஷால் மல்லா, திபேந்திர சிங், குல்சன் ஜா ஆகியோரும், பந்துவீச்சில் சந்தீப் லமிச்சானே, சந்தீப் ஜோரா, கரண் கேசி, லலித் ராஜ்பன்ஷி ஆகியோரும் இருப்பது அணியின் பலமாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக நாளை நடைபெறும் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தேச லெவன்

பாகிஸ்தான்: ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக், பாபர் ஆசம் (கே), முகமது ரிஸ்வான், இஃப்திகார் அகமது, ஆகா சல்மான், ஷதாப் கான், முகமது நவாஸ், ஷஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவூஃப்.

நேபாளம்: குஷால் புர்டெல், ஆசிப் ஷேக், ரோஹித் பவுடல் (கே), திபேந்திர சிங் ஏரே, குஷால் மல்லா, ஆரிப் ஷேக், சந்தீப் லமிச்சனே, சோம்பால் கமி, கரண் கேசி, லலித் ராஜ்பன்ஷி, குல்சன் ஜா.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - முகமது ரிஸ்வான்
  • பேட்ஸ்மேன்கள்- குஷால் புர்டெல், பாபர் அசாம், இமாம் உல் ஹக் (கேப்டன்)
  • ஆல்ரவுண்டர்கள் - தீபேந்தர் சிங் ஐரே, ஷதாப் கான்
  • பந்துவீச்சாளர்கள்- ஷாஹீன் ஷா அப்ரிடி (துணை கேப்டன்), சந்தீப் லமிச்சனே, சோம்பால் கமி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப்

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement