
PAK vs NZ: New Zealand Cricket Team Arrives In Pakistan For First Tour In 18 Years (Image Source: Google)
டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணி 18 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்பதற்கான நியூசிலாந்து அணி இன்று கராச்சி வந்தடைத்தனர். இதன்மூலம் 2003ஆம் ஆண்டிற்கு பிறகு நியூசிலாந்து அணி முதல் முறையாக பாகிஸ்தானில் வந்திறங்கியுள்ளது.
மேலும் நியூசிலாந்து அணியின் மார்டின் கப்தில், டேரியல் மிட்செல், இஷ் சோதி, டாட் ஆஷ்டிலே, மார்க் சாப்மேன் ஆகியோர் நாளைய தினம் பாகிஸ்தான் வந்தடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.