
Pak-Windies ODI series postponed after positive COVID-19 cases in visiting camp (Image Source: Google)
வெஸ்ட் இண்டீஸ் அணி, பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. அனைத்து ஆட்டங்களும் கராச்சியில் நடைபெறுகின்றன. முதல் இரு டி20 ஆட்டங்களை வென்று டி20 தொடரைக் கைப்பற்றியுள்ளது பாகிஸ்தான் அணி.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3ஆவது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியிலாவது வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தானை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த ஷெல்டன் காட்ரெல், ராஸ்டன் சேஸ், கைல் மையர்ஸ் ஆகிய 3 வீரர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் 3 வீரர்கள் உள்பட 5 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது.