Advertisement

AUS vs PAK: பாகிஸ்தான் டெஸ்ட் அணி அறிவிப்பு!

ஆஸ்திரேலிவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் டெஸ்ட் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan February 09, 2022 • 12:43 PM
Pakistan announce squad for Australia Tests, Shaun Tait roped in as fast bowling coach
Pakistan announce squad for Australia Tests, Shaun Tait roped in as fast bowling coach (Image Source: Google)
Advertisement

பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகள் மறுத்ததால் ஆஸ்திரேலிய அணியும் தொடரை ரத்து செய்யுமா என பாகிஸ்தான் ரசிகர்கள் பயந்திருந்தார்கள். 

இந்நிலையில் பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா சமீபத்தில் அறிவித்துள்ளது. 

Trending


கடந்த 1998-க்குப் பிறகு ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்குச் செல்வதால் இத்தொடரை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். மார்ச் மாதம் பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள், 1 டி20 என மூன்று தொடர்களிலும் விளையாடுகிறது ஆஸ்திரேலிய அணி. 

டெஸ்ட் தொடர் மார்ச் 4 அன்றும் ஒருநாள் தொடர் மார்ச் 29 அன்றும் தொடங்குகின்றன. டி20 ஆட்டம் ஏப்ரல் 5 அன்று நடைபெறுகிறது. முதல் டெஸ்ட், ஒருநாள் தொடர், டி20 ஆட்டம் ஆகியவை ராவல்பிண்டியிலும், கராச்சி, லாகூரில் தலா ஒரு டெஸ்டும் நடைபெறுகின்றன. 

இத்தொடருக்கான ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் டெஸ்ட் அணியுன் அறிவிக்கப்பட்டது. 

பாகிஸ்தான் அணி: பாபர் ஆசாம் (கே), முகமது ரிஸ்வான், அப்துல்லா ஷஃபீக், அசார் அலு, ஃபஹீம் அஷ்ரப், ஃபவத் ஆலம், ஹாரிஸ் ராவுஃப், ஹசன் அலி, இமாம் உல் ஹக், முகமது நவாஸ், நௌமன் அலி, சஜித் கான், ஷஹீன் ஷா அஃப்ரிடி, ஷான் மசூத், ஜாஹித் மஹ்மூத்.

இருப்பு: யாசிர் ஷா, சர்பராஸ் அகமது, நசீம் ஷா, முகமது அப்பாஸ், கம்ரான் குலாம்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement