pakistan-captain-babar-azam-to-launch-his-book-babar-ki-kahani (Image Source: Google)
பாகிஸ்தான் அணியின் கேப்டனும், உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரானவரும் பாபர் அசாம். இவர் பாகிஸ்தானின் அனைத்து விதாமன கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் பாபர் அசாம் தனது வாழ்க்கை வரலாறு புத்தகத்தை வெளியிட போவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
“பாபர் கி கஹானி” என்று பெயர் சூட்டப்பட்டுள்ள அப்புத்தகத்தின் வெளியீட்டு தேதியை குறிக்கும் வகையில் பாபர் அசாம் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது இவரது பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.