
Pakistan Cricket Board 'Unanimously' Appoints Ramiz Raja As Chairman (Image Source: Google)
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் 36ஆவது தலைவராக ஒருமனதாக தேர்வாகியுள்ள ரமீஸ் ராஜா அடுத்த மூன்றாண்டுகளுக்கு இப்பதவியை வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக 1984 முதல் 1997ஆம் ஆண்டு வரை விளையாடிய ரமீஸ் ராஜா, இதுவரை 255 சர்வதேச போட்டிகளில் விளையாடி 8,674 ரன்களை குவித்துள்ளார்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021