WI vs PAK: 19 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான 19 பேர் அடங்கிய பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் பாகிஸ்தன் அணி தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதற்காக இரு அணிகளும் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சபினா பார்க் மைதானத்தில் இன்று இரவு 8.30 மணிக்கும் தொடங்குகிறறது.
இதையடுத்து இப்போட்டிகான வெஸ்ட் இண்டீஸ் அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாபர் அசாம் தலைமையிலான 19 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணி : பாபர் ஆஸம் (கே), முகமது ரிஸ்வான், அப்துல்லா ஷஃபிக், அபித் அலி, அசார் அலி, ஃபஹீம் அஷ்ரப், ஃபவாத் ஆலம், ஹசன் அலி, இம்ரான் பட், முகமது அப்பாஸ், நசீம் ஷா, நௌமான் அலி, சஜித் கான், சர்பராஸ் அகமது, சவுத் ஷகீல், ஷாஹீன் அஃப்ரிடி, ஷாநவாஸ் தஹானி, யாசிர் ஷா மற்றும் ஜாஹித் மஹ்மூத்
Win Big, Make Your Cricket Tales Now