Advertisement

பார்வையாளர்களின்றி நடைபெறும் பாகிஸ்தான் - நியூசிலாந்து பயிற்சி ஆட்டம்!

உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் விளையாடும் பயிற்சி ஆட்டமானது பார்வையாளர்களின்றி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan September 19, 2023 • 21:12 PM
பார்வையாளர்களின்றி நடைபெறும் பாகிஸ்தான் - நியூசிலாந்து பயிற்சி ஆட்டம்!
பார்வையாளர்களின்றி நடைபெறும் பாகிஸ்தான் - நியூசிலாந்து பயிற்சி ஆட்டம்! (Image Source: Google)
Advertisement

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் 8ஆவது முறையாக சாம்பியனாகி இருக்கிறது  இந்தியா. சொந்த மண்ணில் இன்னும் ஒரு மாதத்துக்கும் குறைவான காலகட்டத்தில் உலகக் கோப்பை போட்டியில் களம் காண இருக்கும் நிலையில் இந்தியாவுக்கு இந்த சாம்பியன் கோப்பை உத்வேகம் அளிக்கும் என்பது முக்கியமானது.

அதன்படி ஐசிசியின் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக பயிற்சி ஆட்டத்தில் அணிகள் ஈடுபடுவது வழக்கம். அதன்படி செப்டம்பர் 29ஆம் நாள் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் ஹைதராபாத்தில் விளையாட இருக்கிறது. 

Trending


அன்றைய தினத்தில் உள்ளூரில் திருவிழா நடைபெற இருப்பதால் இந்தப் பயிற்சி ஆட்டத்திற்கு பாதுகாப்பு குறைவு ஏற்படுமென பார்வையாளர்களே இல்லாமல் போட்டி நடைபெறுமென தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணிக்கு பயிற்சி ஆட்டம் இங்கிலாந்துடன் செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement