Advertisement

PAK vs BAN, 2ndT20I: வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது பாகிஸ்தான்!

வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்றது.

Advertisement
PAK vs BAN, 2ndT20I: வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது பாகிஸ்தான்!
PAK vs BAN, 2ndT20I: வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது பாகிஸ்தான்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 31, 2025 • 11:52 AM

வங்கதேச அணியானது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்த முடிந்த முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
May 31, 2025 • 11:52 AM

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டி நேற்று லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணிமுதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு ஃபர்ஹான் மற்றும் சைம் அயுப் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சைம் அயுப் 4 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஃபர்ஹானுடன் ஜோடி சேர்ந்த முகமது ஹாரிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. 

இதில் ஃபர்ஹான் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட முகமது ஹாரிஸ் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 41 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 4 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 74 ரன்களைச் சேர்த்த கையோடு ஃபர்ஹானும் ஆட்டமிழந்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஹசன் நவாஸ் ஒருபக்கம் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தி வந்த நிலையில், மறுபக்கம் கேப்டன் சல்மான் ஆகா 19, ஷதாப் கான் 7 மற்றும் ஃபஹீம் அஷ்ரஃப் ஒரு ரன்னில் என விக்கெட்டுகளை இழந்தனர். 

ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையிலும் மறுபக்கம் ஆபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து அசத்திய ஹசன் நவாஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 51 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த நிலையிலும் 201 ரன்களைச் சேர்த்துள்ளது. வங்கதேச அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஹசன் மஹ்மூத் மற்றும் தன்ஸிம் ஹசன் ஷாகீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணிக்கு தன்ஸித் ஹசன் மற்றும் பர்வேஸ் ஹொசைன் எமான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பர்வேஸ் ஹொசைன் 8 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையடி வந்த தன்ஸித் ஹசனும் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் லிட்டன் தாஸ் 6 ரன்னிலும், தாவ்ஹித் ஹிரிடோய் 5 ரன்னிலும், ஜக்கர் அலி ரன்கள் ஏதுமின்றியும், ஷமிம் ஹொசைன் 7 ரன்னிலும், ரிஷாத் ஹொசைன் ஒரு ரன்னிலும், மெஹிதி ஹசன் 23 ரன்னிலும் என் விக்கெட்டுகளை இழந்தனர். 

Also Read: LIVE Cricket Score

பின்னர் களமிறங்கிய வீரர்களில் தன்ஸிம் ஹசன் அதிரடியாக விளையாடி ஒரு பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என அரைசதம் கடந்த கையோடு தனது விக்கெட்டை இழக்க மற்ற வீரர்களும் சோபிக்க தவறினர். இதனால் வங்கதேச அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 144 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் தரப்பில் அப்ரார் அஹ்மத் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement