
Pakistan Should Have The Advantage In The T20 World Cup: Kamran Akmal (Image Source: Google)
இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருந்த ஏழாவது சீசன் உலகக்கோப்பை டி20 தொடரானது, கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறும் என ஐசிசி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி அக்டோபர் மாதம் 17ஆம் தேதி தொடங்கும் இத்தொடரின் இறுதிப் போட்டி நவம்பர் மாதம் 14ஆம் தேதி நடைபெறுகிறது.
மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்த உலக கோப்பை தொடரானது, இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு திட்டமிட்டபடி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த தொடரில் வெற்றி பெறும் அணி எது என்பது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான கம்ரான் அக்மல் இந்த தொடரில் வெற்றி பெறும் அணி குறித்து தனது கருத்தினை வெளியிட்டுள்ளார்.