Advertisement

PAKW vs SLW, 1st ODI: இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்!

இலங்கை மகளிர் அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

Bharathi Kannan
By Bharathi Kannan June 01, 2022 • 20:32 PM
Pakistan start new IWC campaign with resounding victory
Pakistan start new IWC campaign with resounding victory (Image Source: Google)
Advertisement

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணி மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடிவருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற டி20 தொடரை பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று கராச்சியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

Trending


அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் ஹாசினி பெரேரா 4 ரன்களிலும், கேப்டன் அத்தபத்து 25, ஹன்சிமா கருணரத்னே 12, வீரக்கொடி 30, டி சில்வா 16 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

அதன்பின் களமிறங்கிய கவிஷா தில்ஹரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். பின்னர் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கவிஷா 49 ரன்களை எடுத்திருந்த நிலையில், மறுமுனையில் இருந்த வீராங்கனைகள் விக்கெட்டுகளை இழந்தனர்.

இதனால் 47.5 ஓவர்களில் இலங்கை மகளிர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கவிஷா 49 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் தரப்பில் ஃபாதிமா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதையடுத்து எளிய இலக்கை துரத்திய பாகிஸ்தான் மகளிர் அணியில் முனிபா அலி 14 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 

அதன்பின் ஜோடி சேர்ந்த சித்ரா அமீன் - பிஸ்மா மரூஃப் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்தனர்.

பின்னர் 76 ரன்கள் எடுத்திருந்த சித்ரா அமீன் ஆட்டமிழந்து வெளியேற, மறுமுனையில் இருந்த பிஸ்மா மரூஃப் இறுதிவரை ஆட்டமிழக்காம அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.

இதன்மூலம் 41.1 ஓவர்களில் பாகிஸ்தான் மகளிர் அணி இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை மகளிர் அணியை வீழ்த்தியது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement