Advertisement

PAKW vs SLW, 3rd T20I: இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது பாகிஸ்தான்!

இலங்கை மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியிலும் பாகிஸ்தான் மகளிர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

Advertisement
Pakistan swept the T20I series against Sri Lanka after a close-fought victory in the third T20I
Pakistan swept the T20I series against Sri Lanka after a close-fought victory in the third T20I (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 28, 2022 • 08:53 PM

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் மகளிர் அணி வெற்றிப்பெற்று தொடரை வென்றது.

Bharathi Kannan
By Bharathi Kannan
May 28, 2022 • 08:53 PM

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி இன்று கராச்சில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.

Trending

அதன்படி இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை மகளிர் அணிக்கு ஹாசினி பெரேரா - கேப்டன் அத்தபத்து இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர்.

இதில் 24 ரன்களில் ஹாசினி பெரேரா ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 37 ரன்களில் அத்தபத்தும் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய இலங்கை வீராங்கனைகள் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை மகளிர் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்களை மட்டுமே எடுத்தது. 

இதையடுத்து எளிய இலக்கை துரத்திய பாகிஸ்தான் மகளிர் அணியில் முனிபா அலி 25, இரம் ஜாவத் 10, ஒமைமா சொஹைல் 4 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஆலியா ரியாஸ் 17, ஆயிஷா நசீம் 10, நிதா தார் 14 ரன்கள் என தங்களால் முடிந்த பங்களிப்பை வழங்கினர். இறுதியில் கேப்டன் பிஸ்மா மரூஃப் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.

இதன்மூலம் கடைசி பந்தில் பாகிஸ்தான் மகளிர் அணி இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இலங்கை மகளிர் அணியை ஒயிட்வாஷ் செய்தது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement