Advertisement

Pakistan vs Australia, 2nd Test – போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

பாகிஸ்தான் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கராச்சியில் நாளை நடைபெறுகிறது.

Advertisement
Pakistan vs Australia, 2nd Test – Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI
Pakistan vs Australia, 2nd Test – Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 11, 2022 • 09:48 PM

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
March 11, 2022 • 09:48 PM

இதில் ராவல்பிண்டியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், நாளை கராச்சியில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. 

Trending

போட்டி தகவல்கள் 

  • மோதும் அணிகள் - பாகிஸ்தான் vs ஆஸ்திரேலியா
  • இடம் - தேசிய மைதானம், கராச்சி
  • நேரம் - காலை 10.30 மணி

போட்டி முன்னோட்டம்

பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய ஆணி 24 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் முதல்முறையாக டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. 

அதிலும் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற ராவல்பிண்டி டெஸ்ட் போட்டி டிரா ஆன நிலையில் இப்போட்டியில் வெற்றிபெற இரு அணிகளும் தீவிரமாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய அணியில் உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர், மார்னஸ் லபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித் போன்ற நட்சத்திர பேட்டர்களையும், கம்மின்ஸ், ஹசில்வுட், ஸ்டார்க் போன்ற பந்துவீச்சாளர்களையும் கொண்டுள்ளதால் நிச்சயம் பாகிஸ்தானுக்கு சவாலளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியிலும் இமான் உல் ஹக், அசார் அலி, ஃபவாத் ஆலாம், ரிஸ்வான் போன்ற அதிரடி வீரர்களைக் பேட்டிங்கில் கொண்டுள்ளது.

பந்துவீச்சில் ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா, நௌமன் அலி ஆகியோரும் இருப்பதால் நிச்சயம் ஆஸ்திரேலிய அணிக்கு தலைவலியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 67
  • ஆஸ்திரேலியா வெற்றி - 33
  • பாகிஸ்தான் வெற்றி - 15
  • முடிவில்லை - 19

உத்தேச அணி

பாகிஸ்தான் - இமாம் உல் ஹக், அப்துல்லா ஷபீக், அசார் அலி, பாபர் அசாம் (கே), ஃபவாத் ஆலம், முகமது ரிஸ்வான், ஃபஹீம் அஷ்ரப், நசீம் ஷா, சஜித் கான், நௌமன் அலி, ஷாஹீன் அஃப்ரிடி

ஆஸ்திரேலியா - உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர், மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன்/ ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க், நாதன் லையான்

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - முகமது ரிஸ்வான்
  • பேட்டர்ஸ் - அசார் அலி, பாபர் அசாம், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித்
  • ஆல்-ரவுண்டர்கள் - நௌமன் அலி, இப்திகார்-அஹமது
  • பந்துவீச்சாளர்கள் - ஷஹீன் அஃப்ரிடி, நாதன் லயன், பாட் கம்மின்ஸ்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement