Advertisement
Advertisement
Advertisement

பாகிஸ்தான் vs இங்கிலாந்து, 6ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆறாவது டி 20 கிரிக்கெட் போட்டி லாகூரில் உள்ள கடாஃபி மைதானத்தில் நாளை இரவு நடைபெறுகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan September 29, 2022 • 21:32 PM
Pakistan vs England, 6th T20I - Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI
Pakistan vs England, 6th T20I - Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI (Image Source: Google)
Advertisement

எட்டாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் (அக்டோபர்) 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடக்கிறது. உலக கோப்பை போட்டிக்கு சிறப்பாக தயாராகும் பொருட்டு ஒவ்வொரு அணிகளும் மற்ற நாட்டு அணிகளுடன் இறுதிகட்ட போட்டிகளில் மோதுகின்றன.

அந்த வகையில் 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சென்றுள்ளது. இதில் இவ்விரு அணிகளும் மோதிய முதல் 5 போட்டிகளின் முடிவில் பாகிஸ்தான் அணி 3 வெற்றிபெற்று 3-2 எற கணக்கில் முன்னிலைப் பெற்றது. 

Trending


இந்நிலையில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆறாவது டி 20 கிரிக்கெட் போட்டி லாகூரில் உள்ள கடாஃபி மைதானத்தில் நாளை இரவு நடைபெறுகிறது.

போட்டி தகவல்கள்

  •             மோதும் அணிகள் - பாகிஸ்தான் vs இங்கிலாந்து
  •             இடம் - கடாஃபி மைதானம், லாகூர்
  •             நேரம் - இரவு 8 மணி

போட்டி முன்னோட்டம்

இங்கிலாந்து அணியில் முன்னணி வீரர்களான பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ், லிவிங்ஸ்டன் ஆகியோர் இந்த தொடரில் இடம் பெறவில்லை என்றாலும் இங்கிலாந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

அதேசமயம் கேப்டன் ஜோஸ் பட்லர் பின்னங்கால் பகுதியில் ஏற்பட்டுள்ள தசைப்பிடிப்பால் அவதிப்படுவதால் அவர் முதல் 5 போட்டிகளில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் அடுத்த போட்டியில் பங்கேற்பார் என்ற தகவல் அந்த அணிக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.

அவருக்கு பதிலாக கேப்டனாக பொறுப்பேற்றுள்ள மொயீன் அலி சிறப்பாக கேப்டன்சி செய்துள்ளதும் அணிக்கு சாதகமாக அமைந்துள்ளது. மேலும் இனிவரும் போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றால் மட்டுமே தொடரை வெல்லும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அதேசமயம் பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்ததாலும், கடந்த போட்டியில் பெற்ற வெற்றி அந்த அணிக்கும் பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. 

அந்த அணியின் ஒரே நம்பிக்கையாக முகமது ரிஸ்வான் மட்டுமே அடுத்தடுத்து போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதுடன், ஐசிசி டி20 பேட்டர்கள் தரவரிசைப் பட்டியளிலும் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். 

மேலும் பந்துவீச்சில் நசீம் ஷா, ஹாரிஸ் ராவூஃப் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது அந்த அணிக்கு சற்று சாதகமாக அமைந்துள்ளது. ஆனாலும் அடுத்தடுத்த போட்டிகளிலும் வெற்றிபெற்றால் மட்டுமே சொந்த மண்ணில் தொடரை இழப்பதை தடுத்த நிறுத்த உதவும் என்பதால் நிச்சயம் வெற்றிக்காக அந்த அணி போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேருக்கு நேர்

  •     மோதிய போட்டிகள் - 23
  •     பாகிஸ்தான் - 08
  •     இங்கிலாந்து - 14
  •     முடிவில்லை - 1

உத்தேச அணி

பாகிஸ்தான் - முகமது ரிஸ்வான் , பாபர் ஆசம் (கே), ஷான் மசூத், இப்திகார் அகமது, ஹைதர் அலி, ஆசிப் அலி, ஷதாப் கான், முகமது நவாஸ், அமீர் ஜமால், முகமது வாசிம் ஜூனியர், ஹாரிஸ் ரவுஃப்

இங்கிலாந்து - பிலிப் சால்ட் , அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மாலன், பென் டக்கெட், ஹாரி புரூக், மொயின் அலி (கே), சாம் கர்ரன், கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, அடில் ரஷித், மார்க் வூட்

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  •      விக்கெட் கீப்பர் - முகமது ரிஸ்வான்
  •      பேட்டர்ஸ் - பாபர் ஆசம், பென் டக்கெட், ஹாரி புரூக், ஷான் மசூத்
  •      ஆல்-ரவுண்டர்கள் - மொயீன் அலி, முகமது நவாஸ்
  •      பந்து வீச்சாளர்கள் – ஹரிஸ் ரவுப், மார்க் வூட், அடில் ரஷித், உஸ்மான் காதிர்


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement