
Pakistan's Naseem Shah Out Of PSL 2021 For Breaching Covid Protocol (Image Source: Google)
பாகிஸ்தான் அணியின் இளம் நட்சத்திரம் நசீம் ஷா. இவர் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி 20 தொடரில் கட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்நிலையில், கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக நடப்பாண்டு பிஎஸ்எல் தொடர் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் தற்போது இத்தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படவுள்ளது.
இதற்காக மே 26ஆம் தேதி பாகிஸ்தான் வீரர்கள் தனி விமானம் மூலம் அபுதாபி செல்லவுள்ளனர். இந்நிலையில் அபுதாபி செல்லும் பயணத்தில் இருந்து விலகுவதாக வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா தெரிவித்துள்ளார். இது கரோனா நெறிமுறைகளுக்கு எதிரானது என்பதால், அவரை தொடரில் இருந்து விலகியது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.