
Pakistan’s Shahid Afridi makes BIG statement against India, check here (Image Source: Google)
கடந்த இரு வாரங்களுக்கு முன் ராவல்பிண்டியில் நியூஸிலாந்து - பாகிஸ்தான் ஒருநாள் தொடர் தொடங்க இருந்தது. ஆனால், போட்டி தொடங்க இருந்த சில நிமிடங்களுக்கு முன் திடீரென நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் தொடரை ரத்து செய்தது. பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்ததையடுத்து, இந்த முடிவை எடுத்திருப்பதாக நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் கூறிய அதே காரணத்தைக் கூறி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் நவம்பர், டிசம்பரில் மேற்கொள்ள இருந்த பாகிஸ்தான் பயணத்தையும் ரத்து செய்தது.
பாதுகாப்புக் காரணங்களைக் கூறி நியூஸிலாந்து, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் தொடரை ரத்து செய்தது பாகிஸ்தான் வாரியத்துக்குப் பெரும் நெருக்கடியையும், நிதிரீதியாகப் பெரும் இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது.