
Pakistan's T20I Series Against West Indies Reduced To Four Matches (Image Source: Google)
பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட், 2 டெஸ்ட், 5 டி20 போட்டிகளில் விளையாடுவதாக இருந்தது.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலிய அணிக்கெதிராக 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடுகிறது. இதில் டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ் அணி, ஒருநாள் தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இதற்கிடையில் ஒருநாள் தொடரின் போது வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த ஊழியர் ஒருவருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டு, பின்னர் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். இதன் காரணமாக இரண்டாவது ஒருநாள் போட்டி டாஸ் போடப்பட்ட நிலையில், ஒத்திவைக்கப்பட்டு, நேற்று நடைபெற்றது.