
டி20உலகக் கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கடந்த இரு தினங்களுக்கு முன் துபாயில் நடந்தது. இதில் பாகிஸ்தான் அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதுவரை 12 முறை உலகக் கோப்பையில் இந்தியாவுடன் மோதிய பாகிஸ்தான் அனைத்திலும் தோல்வி அடைந்து 13ஆவது முறையில் முதல் வெற்றியைப் பெற்றது.
இந்தப் போட்டியின்போது தேநீர் இடைவேளையில் பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான், மைதானத்தில் நமாஸ் செய்தார். இந்தக் காட்சியைக் குறி்ப்பிட்டு பாகிஸ்தான் முன்னாள் வீரர் வக்கார் யூனுஸ் கருத்துத் தெரிவித்திருந்தார்.
அவர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “பாபர், ரிஸ்வான் பேட் செய்ததும், ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்ததும் அவர்கள் இருவரும் பேசிக்கொண்டதும் அற்புதமாக இருந்தது. இதில் சிறந்தது என்னவென்றால், ரிஸ்வான், தேநீர் இடைவேளையின்போது, மைதானத்தில் இருந்த ஏராளமான இந்துக்கள் முன்னிலையில் நமாஸ் செய்ததாகும். இது உண்மையில் எனக்கு மிகச்சிறப்பானதாக இருந்தது” எனத் தெரிவி்த்தார்.