
Cricket Image for 'சிஎஸ்கேவின் துருப்புச்சீட்டு இவர் தான்' - பார்த்தீவ் படேல் (Parthiv Patel (Image Source: Google))
இந்தியாவின் உள்ளூர் டி20 திருவிழாவான ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் தொடங்குகிறது. மொத்த எட்டு அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் 56 லீக் போட்டிகாள் நடைபெறவுள்ளன. லீக் போட்டிகளில் முதல் நான்கு இடங்கைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்றில் மோதவுள்ளன.
இந்நிலையில், இத்தொடரின் பலம் வாய்ந்த அணியாக கருதப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்குக்கூட முன்னேறாமல் லீக் போட்டிகளுடன் வெளியாறியது. இதையடுத்து நடப்பு சீசனுக்கான பயிற்சிகளை சென்னை வீரர்கள் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துருச்சீட்டாக அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா செயல்படுவார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.