
Pat Cummins Leaves IPL 2022 After Suffering Minor Injury (Image Source: Google)
ஐபிஎல் 15ஆவது சீசன் லீக் சுற்றின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் அணியாக பிளே ஆஃபிற்கு முன்னேறிவிட்ட நிலையில், லக்னோ அணியும் பிளே ஆஃபிற்கு முன்னேறிவிடும். மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் தொடரை விட்டு வெளியேறிவிட்டன.
எனவே எஞ்சிய 2 இடங்களுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இனிவரும் ஒவ்வொரு போட்டியுமே இந்த அணிகளுக்கு மிக முக்கியமானவை.
அந்தவகையில், இந்த அணிகள் அடுத்தடுத்து கட்டாய வெற்றிகளை எதிர்நோக்கியுள்ள நிலையில், கேகேஆர் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் பாட் கம்மின்ஸ் காயம் காரணமாக இந்த சீசனின் எஞ்சிய போட்டிகளிலிருந்து விலகியுள்ளார்.