Advertisement

ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸை எதிர்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan May 04, 2024 • 14:57 PM
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Cricketnmore)
Advertisement

17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது நாளுக்கு நாள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு எந்த நான்கு அணிகள் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 53ஆவது லீக் ஆட்டத்தில் சாம் கரண் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து, ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது. இத்தொடரில் ஏற்கெனவே இவ்விரு அணிகளும் மோதிய முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியைத் தழுவியுள்ளதால், இப்போட்டியில் அதற்கான பதிலடியை கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 

போட்டி தகவல்கள்

Trending


  • மோதும் அணிகள் - பஞ்சாப் கிங்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்
  • இடம் - ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதனம், த்ர்மசாலா
  • நேரம் - மதியம் 3.30 மணி

பிட்ச் ரிப்போர்ட்

நடப்பு ஐபிஎல் தொடரில் இந்த மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டி இதுவாகும். மேலும் இங்குள்ள பிட்ச்கள் பேட்டர் மற்றும் பந்துவீச்சாளர்கள் என இருபிரிவுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. அதேபோல் இங்கு கூடுதல் பவுன்ஸ் இருக்கும் என்பதால் பேட்டர்கள் தங்கள் ஷாட்டுகளை விளையாட வசதியாக அமையும். இந்த மைதானம் பேட்டர்களுக்கு ஏற்றதாக பார்க்கப்பட்டலும், பந்துவீச்சாளர்களாலும் இங்கு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதால் நிச்சயம் நல்ல கிரிக்கெட் விளையாடுவதற்கு ஏற்றதாக இருக்கும். அதனால் டாஸ் வெல்லும் கேப்டன் சேஸிங்கை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்,

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 29
  • பஞ்சாப் கிங்ஸ் - 14
  • சென்னை சூப்பர் கிங்ஸ் - 15

நேரலை

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் இந்த சீசனின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டு ரசிக்கலாம். அதேசமயம் இத்தொடரின் ஓடிடி உரிமத்தை வியாகம் 18 நிறுவனம் பெற்றுள்ளதால், ரசிகர்கள் இத்தொடரை ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இலவசமாக நேரலையில் கண்டு மகிழலாம். 

உத்தேச லெவன்

பஞ்சாப் கிங்ஸ்: ஜானி பேர்ஸ்டோவ், சாம் கரன் (கே), ரைலீ ரூஸோவ், ஷஷாங்க் சிங், ஜிதேஷ் ஷர்மா, அஷுதோஷ் சர்மா, ஹர்பிரீத் பிரார், ககிசோ ரபாடா, ஹர்ஷல் படேல், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்

சென்னை சூப்பர் கிங்ஸ்: அஜிங்கியா ரஹானே, ருதுராஜ் கெய்க்வாட் (கே), டேரில் மிட்செல், மொயின் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, ஷர்துல் தாக்கூர், துஷார் தேஷ்பாண்டே, மதீஷா பதிரானா, ரிச்சர்ட் க்ளீசன்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள்: ஜானி பேர்ஸ்டோவ்
  • பேட்டர்ஸ்: டேரில் மிட்செல், ஷஷாங்க் சிங், ஷிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரைலி ரூஸோவ்
  • ஆல்ரவுண்டர்கள்: சாம் கரன் (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா
  • பந்துவீச்சாளர்கள்: ஹர்பிரீத் பிரார், ககிசோ ரபாடா, மதீஷா பதிரானா.

PBKS vs CSK Dream11 Prediction, Today Match Prediction, Today Match PBKS vs CSK, PBKS vs CSK Dream11 Team, Fantasy Cricket Tips, PBKS vs CSK Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Punjab Kings vs Chennai Super Kings

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement