
Punjab Kings vs Chennai Super Kings Dream11 Prediction, IPL 2025: ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து வருகிறது. அதிலும் ஒவ்வொரு ஆட்டத்திலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருவதன் காரணமாக ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 22ஆவது லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளும் தோல்விகு பிறகு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதன் காரணமாக, இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
PBKS vs CSK: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள்- பஞ்சாப் கிங்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்
- இடம் - மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானம், லக்னோ
- நேரம் - ஏப்ரல் 08, இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)