Advertisement

ஐபிஎல் 2022: தோல்விக்கான காரணம் குறித்து பேசிய ஜடேஜா!

இனிவரும் போட்டிகளில் சிறந்த கம்பேக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையுள்ளதாக சிஎஸ்கே கேப்டன் ரவீந்திர் ஜடேஜா தெரிவித்துள்ளார்.

Advertisement
PBKS vs CSK: Ravindra Jadeja unhappy with bowlers after CSK's 11-run defeat
PBKS vs CSK: Ravindra Jadeja unhappy with bowlers after CSK's 11-run defeat (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 26, 2022 • 09:48 AM

ஐபிஎல் 15ஆவது சீசனின் 38ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
April 26, 2022 • 09:48 AM

பிட்ச் வேகம் குறைந்த பந்துகளுக்கும், ஸ்பின்னிற்கும் சாதகமாக இருக்கும் என முன்பு கணிக்கப்பட்டிருந்தது. இறுதியில் அதேபோல்தான் நடந்தது. சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் துவக்கம் முதலே வேகம் குறைந்த பந்துகளை வீச ஆரம்பித்தார்கள். அதேபோல் ஸ்பின்னர் தீக்ஷனாவுக்கு பவர் பிளேவிலேயே ஓவர்கள் வழங்கப்பட்டது.

Trending

இந்நிலையில் மயங்க் அகர்வால் 18 (21) ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து ஷிகர் தவன் 88 (5), ராஜபக்சா 42 (32) ஆகியோர் பெரிய ஸ்கோர் அடித்தனர். தொடர்ந்து லிவிங்ஸ்டன் கடைசி நேரத்தில் 19 (7) ரன்கள் சேர்த்தார். இதனால், பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 187/4 ரன்களை குவித்தது.

இலக்கை துரத்திக் களமிறங்கிய சிஎஸ்கே அணியில் ராபின் உத்தப்பா 1 (7), சாண்ட்னர் 9 (15), ஷிவம் துபே 8 (7) ஆகிய முதல் வரிசை பேட்ஸ்மேன்கள் அதிக பந்துகளை எதிர்கொண்டு ஒற்றை இலக்க ரன்களை மட்டுமே சேர்த்து அவுட் ஆனார்கள். ருதுராஜ் தனது பங்கிற்கு 27 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்த நிலையில், அம்பத்தி ராயுடு தொடர்ந்து சிறப்பாக விளையாடி 39 பந்துகளில் 7 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் உட்பட 78 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இதனைத் தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா, தோனி ஆகியோர் களத்தில் இருந்தார்கள். அப்போது 12 பந்துகளில் 35 ரன்கள் தேவைப்பட்டது. அர்ஷ்தீப் சிங் பந்துவீசி 8 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். இறுதியில் 6 பந்துகளில் 27 ரன்கள் தேவைப்பட்டது. ரிஷி தவன் வீசிய முதல் பந்தில் தோனி சிக்ஸர் அடித்தார். அடுத்து மூன்றாவது பந்தில் தோனி 12 (8) பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் 3 பந்துகளில் 20 ரன்கள் தேவைப்பட்டது. சிஎஸ்கே 20 ஓவர்களில் 176/6 ரன்கள் மட்டும் அடித்து, 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

போட்டி முடிந்தப் பிறகு பேசிய ஜடேஜா, “போட்டியை சிறப்பாகத்தான் ஆரம்பித்தோம். 10-15 ரன்களை அதிகமாக விட்டுக்கொடுத்ததுதான் பெரிய தவறு. 175 ரன்களுக்குள் பஞ்சாப்பை கட்டுப்படுத்தியிருந்தால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்திருக்கும். தோல்விக்கு இதுதான் முக்கிய காரணம். பவர் பிளேவில் நாங்கள் இன்னும் கொஞ்சம் அதிக ரன்களை சேர்த்திருக்க வேண்டும். சிறந்த கம்பேக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது” எனக் கூறினார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement