ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - உத்தேச லெவன்!
பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது நாளுக்கு நாள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு எந்த நான்கு அணிகள் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெறும் 53ஆவது லீக் ஆட்டத்தில் சாம் கரண் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து, ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது. இத்தொடரில் ஏற்கெனவே இவ்விரு அணிகளும் மோதிய முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியைத் தழுவியுள்ளதால், இப்போட்டியில் அதற்கான பதிலடியை கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
Trending
பஞ்சாப் கிங்ஸ்
சாம் கரண் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியானது 10 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 6 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் 8ஆவது இடத்தில் உள்ளது. தொடர்ச்சியாக 4 தோல்விகளை சந்தித்த அந்த அணி தற்போது அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெற்ற உத்வேகத்துடன் அந்த அணி இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. மேலும் அந்த அணி இனிவரும் போட்டிகளில் வெற்றிபெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பதால் கூடுதல் உத்வேகத்துடன் களமிறங்குகின்றனர்.
அணியின் பேட்டிங்கில் பிரப்ஷிம்ரன், ஜானி பேர்ஸ்டோவ், ரைலீ ரூஸோவ், சாம் கரண், ஷஷாங்க் சிங், அஷுதோஷ் சர்மா என சிறப்பான ஃபார்மில் உள்ளனர். அணியின் பேட்டிங் வரிசை பலமாக இருந்தாலும், பஞ்சாப் அணியின் பந்து வீச்சு வலுவில்லாமல் காணப்படுகிறது. அனுபவம் வாய்ந்த காகிசோ ரபாடா, ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங், சாம் கரண் ஆகியோர் இதுரை ஒருங்கிணைந்த செயல் திறனைவெளிப்படுத்தவில்லை. இதனால் அந்த அணி பந்துவீச்சில் முன்னேறும் பட்சத்தில் நிச்சயம் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பஞ்சாப் கிங்ஸ் உத்தேச லெவன்: ஜானி பேர்ஸ்டோவ், சாம் கரன் (கே), ரைலீ ரூஸோவ், ஷஷாங்க் சிங், ஜிதேஷ் ஷர்மா, அஷுதோஷ் சர்மா, ஹர்பிரீத் பிரார், ககிசோ ரபாடா, ஹர்ஷல் படேல், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்
சென்னை சூப்பர் கிங்ஸ்
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணி 10 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 5 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. சிஎஸ்கே அணியின் பேட்டிங் ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே ஆகியோரை மட்டுமே பெரிதும் சார்ந்துள்ளது. இருப்பினும் கடந்த போட்டியில் டேரில் மிட்செல் அரைசதம் கடந்து ஃபார்முக்கு திரும்பியுள்ளது அணிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. அதேபோல் அஜிங்கியா ரஹானே, ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் அடுத்தடுத்து ரன்களைச் சேர்க்க தடுமாறி வருவது அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
பந்து வீச்சை பொறுத்தவரையில் கடந்த ஆட்டத்தில் பனிப்பொழிவு அதிகம் இருந்ததால் சிஎஸ்கே வீரர்கள் ரன்களை வாரி வழங்கினர் என்பதை மறந்துவிட முடியாது. அணியின் முக்கிய வீரர்களான மதீஷா பதிரனா, முஸ்தஃபிசூர் ரஹ்மான் ஆகியோர் முக்கிய பங்காற்றிவுள்ளனர். ஆனாலும் தற்போது முஸ்தஃபிசூர் ரஹ்மான் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதேபோல் தீபக் சஹாரும் காயத்தை எதிர்கொண்டுள்ள அணிக்கு பேரிடியாக அமைந்துள்ளது. இதனால் சிஎஸ்கே அணி இந்த பின்னடைவை எப்படி சமாளிக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் உத்தேச லெவன்: அஜிங்க்யா ரஹானே, ருதுராஜ் கெய்க்வாட் (கே), டேரில் மிட்செல், மொயீன் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, தீபக் சஹார், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தஃபிசூர் ரஹ்மான், மதீஷா பதிரனா
Win Big, Make Your Cricket Tales Now