Advertisement

பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - அணிகள் ஓர் அலசல்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

Advertisement
பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - அணிகள் ஓர் அலசல்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 08, 2025 • 11:32 AM

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 58ஆவது லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
May 08, 2025 • 11:32 AM

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது தர்மசாலாவில் உள்ள இமாச்சலப் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணி ஏறத்தாழ பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதிசெய்துள்ள நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியாது பிளே ஆஃப் சுற்று வாய்ப்பில் நீடிக்க இந்த வெற்றியானது மிகவும் அவசியமாகும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.இந்நிலையில் இரு அணிகளின் பலம், அணிகளின் உத்தேச லெவன், நேருக்கு நேர் தரவுகள் மற்றும் ஃபேண்டஸி லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

பஞ்சாப் கிங்ஸ்

ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 7 வெற்றி, 3 தோல்விகளுடன் 15 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த போட்டியில் அந்த அணி லக்னோ அணிக்கு எதிராக வெற்றிபெற்ற கையோடு இந்த போட்டியை எதிர்கொள்கிறது. இதனால் அந்த அணி இன்றைய போட்டியில் வெற்றிபெற்று பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதிசெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் டாப் ஆர்டர் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழப்பது அணிக்கு பெரும் பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் ஃபார்மிற்கு திரும்பியுள்ளது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. இதனால் இந்த ஆட்டத்தில் அந்த அணி வெற்றிபெறுமா என்பதை பொறுத்திருந்து தன் பார்க்கவேண்டும்.

பஞ்சாப் கிங்ஸ் உத்தேச லெவன்: பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நேஹால் வதேரா, ஷஷாங்க் சிங், ஜோஷ் இங்கிலிஸ், சூர்யன்ஷ் ஷெட்ஜ், மார்கோ ஜான்சன், அசம்துல்லா ஓமர்சாய், ஹர்ப்ரீத் பிரார், அர்ஷ்தீப் சிங்

டெல்லி கேப்பிட்டல்ஸ்

அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிய 11 போட்டிகளில் 6 வெற்றி, 4 தோல்வி என 13 புள்ளிகளுடன்  புள்ளிப்பட்டியலின் ஐந்தாம் இடத்தில் உள்ளது. இதனால் எஞ்சியுள்ள போட்டிகளில் அந்த அணி வெற்றிகளை பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு குறித்து யோசிக்க முடியும் என்பதால் அந்த அணி கூடுதல் முயற்சியுடன் இப்போட்டியில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணியின் பேட்டிங் ஆர்டரைப் பொறுத்தமட்டில் அபிஷேக் போரல், அக்ஸர் படேல், கேஎல் ராகுல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் உள்ளிட்டோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அதேசமயம் பந்துவீச்சை பொறுத்தமட்டில் மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், விப்ராஜ் நிகம் உள்ளிட்டோர் அபாரமாக செயல்பட்டு வரும் நிலையில், நடராஜன் , துஷ்மந்தா சமீரா உள்ளிட்டோரும் ஃபார்முக்கு திரும்பியுள்ளது அணிக்கு கூடுதல் பலத்தை வழங்கியுள்ளது. 

டெல்லி கேப்பிட்டல்ஸ் உத்தேச லெவன்: அபிஷேக் போரல், கருண் நாயர், கேஎல் ராகுல், அக்ஸர் படேல் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அசுதோஷ் சர்மா, விபராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், துஷ்மந்த சமீரா, குல்தீப் யாதவ், நடராஜன்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 33
  • பஞ்சாப் கிங்ஸ் - 17
  • டெல்லி கேப்பிட்டல்ஸ் - 16

Also Read: LIVE Cricket Score

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள் - பிரப்சிம்ரன் சிங் (துணை கேப்டன்), கேஎல் ராகுல், அபிஷேக் போரெல்
  • பேட்ஸ்மேன்கள் - ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், பிரியன்ஸ் ஆர்யா, ஷஷாங்க் சிங்
  • ஆல்-ரவுண்டர்கள் - மார்கோ ஜான்சன், அக்ஸர் படேல்
  • பந்து வீச்சாளர்கள்- அர்ஷ்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க்.
Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement