ஜேம்ஸ் ஃபால்க்னருக்கு பிஎஸ்எல்-லில் பங்கேற்க வாழ்நாள் தடை!
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் இருந்து வெளியேறிய நிலையில், வாழ்நாள் தடைக்கு உள்ளாகியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஜேம்ஸ் ஃபால்க்னர். இவர் பாகிஸ்தானில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
கடந்த மாதம் 27ஆம் தேதி தொடங்கிய இந்தத் தொடர் வருகிற 27ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் குயிட்டா அணி ஒப்பந்தத்திற்கு மரியாதை கொடுக்கும் வகையில் நடந்து கொள்ளவில்லை எனக் குற்றம்சாட்டினார்.
Trending
அத்துடன் தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவருக்கு வாழ்நாள் தடைவிதித்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் ஃபால்க்னர் ஆறு போட்டிகளில் விளையாடி 6 விக்கெட் வீழ்த்தியிருந்தார்.
அவர் வெளியிட்டுள்ள தகவலில் ‘‘நான் மீண்டும் பாகிஸ்தான் மண்ணில் சர்வதேச போட்டி நடக்க உதவி செய்ய விரும்பினேன். பாகிஸ்தானில் ஏராளமான இளம் திறமையான வீரர்கள் உள்ளனர். ரசிகர்கள் மிகவும் சிறப்பானவர்கள். இப்படி இருந்தும் நான் வெளியேறுவது மனவேதனை தருகிறது.
ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் நான் அவமானத்தை பெற்றேன். அதுபோன்று நடத்தப்பட்டேன். நீங்கள் அனைவரும் என்னுடைய நிலையை புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now