Advertisement
Advertisement
Advertisement

பிஎஸ்எல் 2024: பெஷாவர் ஸால்மி vs குயிட்டா கிளாடியேட்டர்ஸ்- ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் பெஷாவர் ஸால்மி - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Bharathi Kannan
By Bharathi Kannan March 08, 2024 • 14:55 PM
பிஎஸ்எல் 2024: பெஷாவர் ஸால்மி vs குயிட்டா கிளாடியேட்டர்ஸ்- ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பிஎஸ்எல் 2024: பெஷாவர் ஸால்மி vs குயிட்டா கிளாடியேட்டர்ஸ்- ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்! (Image Source: Google)
Advertisement

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் எந்தெந்த அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளன. இந்நிலையில் இன்று நடைபெறும் 25ஆவது லீக் போட்டியில் பாபர் ஆசாம் தலைமையிலான பெஷாவர் ஸால்மி அணியை எதிர்த்து, ரைலீ ரூஸொவ் தலைமையிலான குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகிறது. இத்தொடரில் இவ்விரு அணிகளும் தலா 4 வெற்றிகளை பதிவுசெய்து புள்ளிப்பட்டியலின் அடுதடுத்த இடங்களில் உள்ளதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று குவாலிஃபையர் சுற்றுக்கான வாய்ப்பை உறுதிசெய்யும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

போட்டி தகவல்கள்

Trending


  • மோதும் அணிகள் -  பெஷாவர் ஸால்மி vs குயிட்டா கிளாடியேட்டர்ஸ்
  • இடம் - ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம், ராவல்பிண்டி
  • நேரம் - இரவு 7.30 மணி

பிட்ர் ரிப்போர்ட்

இப்போட்டி நடைபெறும் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானமானது பேட்டர் மற்றும் பந்துவீச்சாளர்கள் என இரு தரப்புக்கும் சாதகமான மைதானமாக பார்க்கப்படுகிறது. இங்கு அதிகளவு பவுன்ஸ் இருப்பதால் பேட்டர்களால் தங்களது ஷாட்களை விளையாட முடியும். அதேசமயம் பந்தை ஸ்விங் செய்யும் பந்துவீச்சாளர்களும், சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் சிறப்பாக செயல்பட உதவும். இதனால் இங்கு பேட்டர் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு இடையே நல்ல போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நேரலை 

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரை இந்திய ரசிகர்கள் ஃபேன்கோட் செயலி மூலம் நேரலையில் கண்டுகளிக்கலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 22
  • பெஷாவர் ஸால்மி - 12
  • குயிட்டா கிளாடியேட்டர்ஸ் - 10

உத்தேச லெவன்

பெஷாவர் ஷால்மி: பாபர் ஆசாம் (கே), சைம் அயூப், ஹசீபுல்லா கான், டாம் கோஹ்லர்-காட்மோர், ரோவ்மேன் பாவெல், ஆசிஃப் அலி, அமீர் ஜமால், நவீன்-உல்-ஹக், லூக் வூட், மெஹ்ரான் மும்தாஜ், சல்மான் இர்ஷாத்

குயிட்டா கிளாடியேட்டர்ஸ்: ஜேசன் ராய், சவுத் ஷகீல், ரைலீ ரூஸோவ் (கே), கவாஜா நஃபே, சர்ஃபராஸ் அகமது, ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், அகீல் ஹொசைன், உஸ்மான் தாரிக், முகமது அமீர், முகமது ஹஸ்னைன், அப்ரார் அகமது

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்: ஹசீபுல்லா
  • பேட்டர்ஸ்: ஜேசன் ராய் (துணை கேப்டன்), பாபர் ஆசாம் (கேப்டன்), சைம் அயூப்
  • ஆல்-ரவுண்டர்கள்: சவுத் ஷகீல், ரோவ்மேன் பாவெல், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், அமீர் ஜமால்
  • பந்துவீச்சாளர்கள்: லூக் வூட், அகீல் ஹொசைன், அப்ரார் அகமது

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement