உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஷர்தூல் விளையாட வேண்டும்- சஞ்சய் மஞ்சரேக்கர்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக ஷர்துல் தாக்கூர் இடம்பெற வேண்டும் என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி ஜூன் 18ஆம் தேதி இங்கிலாந்தின் புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
இப்போட்டிக்கான இந்திய அணி இந்த வாரம் அறிவிக்கப்பட்ட நிலையில், இம்மாத இறுதியில் இந்திய அணி வீரர்கள் இங்கிலாந்திற்கு செல்லவுள்ளனர்.
Trending
இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக ஷர்துல் தாக்கூர் இடம்பெற வேண்டும் என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய மஞ்சரேக்கர்,“உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது. அதிலும் இப்போட்டி இங்கிலாந்தில் நடைபெறுகிறது. இதன் காரணமாக இந்திய அணியின் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக ஷர்துல் தாக்கூர் அணியில் இடம்பிடிக்க வேண்டும் என நினைக்கிறேன்.
ஏனெனில் அவரால் பந்தை எளிதில் ஸ்விங் செய்ய முடியும். அதேசமயம் அவரது பந்து வீச்சு இங்கிலாந்து மைதானங்களில் சிறப்பாக செயல்படும். பும்ரா, ஷமி ஆகியோருடன் ஷர்துல் தாக்கூரும் அணியில் இருந்தால் அது நிச்சயம் அணிக்கு பலமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now