வீரர்கள் தேர்வின்போது எடுத்த படம் அல்ல - சவுரவ் கங்குலி
விராட் கோலி கேப்டன் பதவி விவகாரத்தில் பிசிசிஐ தலைவர் கங்குலி மீது சிலர் விமர்சனம் எழுப்பிய நிலையில், தேர்வுக்குழுவில் இடம் பெற்றதாக வெளியான படம் சர்ச்சையை கிளப்பியது.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக முன்னாள் கேப்டன் கங்குலி உள்ளார். இந்த பதவியில் நியமிக்கப்பட்டதில் இருந்து திறம்பட செய்து வருகிறார். இவர்தான் முதன்முறையாக இந்திய மண்ணில் பகல்-இரவு டெஸ்ட் போட்டியை அறிமுகப்படுத்தினார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சில தொடர்களை நடத்த முடியாத நிலையில் ஏற்பட்டது. கடந்த சீசன் ரஞ்சி கோப்பை தொடரை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதேநேரில் பெண்கள் கிரிக்கெட்டிற்கு முக்கியத்துவம் வழங்கியதாக கூறப்பட்டது.
Trending
விராட் கோலி கேப்டன் விவகாரத்தில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். இந்த நிலையில்தான், கிரிக்கெட்டில் தாதாவாக செயல்பட்ட கங்குலி, கிரிக்கெட் வாரியத்திலும் தாதாவாக செயல்பட்டு வருகிறார். வீரர்கள் தேர்வில் தலையிடுகிறார் விமர்சனம் எழுந்தது. உச்சக்கட்டமாக வீரர்கள் தேர்வு செய்யும் தேர்வுக்குழுவில் கலந்து கொண்டதாக சமூக வலைதளங்களில் படம் ஒன்று பரவி வருகிறது.
தற்போது, அந்த படம் தேர்வுகுழு அணியை தேர்வு செய்யும்போது எடுத்தப்படம் அல்ல என சவுரவ் கங்குலி விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து கங்குலி கூறுகையில் ‘‘ஆதாரமற்ற குற்றச்சாட்டிற்கு மதிப்பளித்து யாருக்கும் பதில் அளிக்க வேண்டும் என நான் நினைக்கவில்லை. நான் பிசிசிஐ தலைவர். தலைவராக பிசிசிஐ-க்கு என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்கிறேன்.
மேலும், நான் தேர்வுக்குழு உறுப்பினர்களுடன் இருக்கும் படம் சமூக வலைத்தளங்களில் பரவிக் கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியும்.
விராட் கோலி, ரோகித் சர்மா, ஜெய் ஷா ஆகியோருடன் நான் இருக்கும் படம் தேர்வுக்குழு கூட்டத்தின்போது எடுத்த படம் இல்லை என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now