
Pietersen: Gujarat Has Shown Aggression, While MI Has Laid Down In IPL 2022 So Far (Image Source: Google)
ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி ஒரேயொரு ஆட்டத்தில் மட்டும் தோல்வியடைந்து புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை ஆக்கிரமித்து வருகிறது. இதனை 2008-இல் ஷேன் வார்ன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் ஒப்பிட்டு பீட்டர்சென் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “தற்போதைய நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணியை ஐபிஎல்-இல் கட்டுப்படுத்துவது கடினமானது. அவர்களது அணியைப் பார்த்தபோது அவர்கள் புள்ளிகள் பட்டியலில் முதன்மையாக இருப்பார்கள் என நினைக்கவில்லை. ஆனால், அவர்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றனர்.
இது 2008 ஷேன் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை நினைவுபடுத்துகிறது. அவர்கள் சிறந்த அணி இல்லை. ஆனால், அவர்கள் அனைவருக்கும் தாங்கள் செய்கிறோம் என்பது தெரியும். அவர்களிடம் சிறந்த மனநிலை இருந்தது.