
ஐபிஎல் தொடரின் 69வது லீக் போட்டியில் நேற்று டெல்லி மற்றும் மும்பை அணிகள் மோதின. டெல்லி அணி வெற்றி பெற்றால் தான் ப்ளே ஆஃப் செல்ல முடியும் என்ற சூழலில் இந்த போட்டி நடைபெற்றது.
அதன்படி டெல்லி அணியின் கையில் தான் வெற்றி வாய்ப்பு இருந்தது. ஆனால் ஒரே ஒரு முடிவு எடுக்கும் வரை. டெல்லி நிர்ணயித்த 160 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணி 95 ரன்களுக்கெல்லாம் 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. கடைசி நம்பிக்கையாக இருந்த டிம் டேவிட்டும் சீக்கிரமாக அவுட்டாகியிருக்க வேண்டும்.
டிம் டேவிட் களமிறங்கிய முதல் பந்திலேயே பந்து எட்ஜாகி கேட்ச் ஆனது. ஆனால் கள நடுவர் இதற்கு அவுட் தர மறுத்தார். பந்து பேட்டில் எட்ஜானது நன்கு தெரிந்தது. ஆனால், ரிஷப் பண்ட் தன்வசம் 2 ரிவ்யூவ் வைத்திருந்தும் எடுக்க மறுத்தார். இது ஏன் என்றே யாருக்கும் புரியவில்லை. கடைசியில் டிம் டேவிட் தான் எமனாக அமைந்தார். 11 பந்துகளில் 34 ரன்களை விளாசி வெற்றிக்கு காரணமாக அமைந்தார். இதனால் ரிஷப் பண்ட் மீது விமர்சனங்கள் குவிந்தன.