ஐபிஎல் 2021: வீரர்களின் கூட்டு முயற்சியே வெற்றிக்கு காரணம் - தோனி!
இதுவரை எங்களை நம்பி ஆதரிக்கும் எங்களது ரசிகர்களுக்கு நன்றி. எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் அவர்களின் நம்பிக்கையை நாங்கள் மீண்டும் பெற்றுள்ளது மகிழ்ச்சி என்று சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 44ஆவது லீக் போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இதில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி முதலில் பந்து வீசுவதாக தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை மட்டுமே குவித்தது. பின் வெற்றியை நோக்கி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.4 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணியானது பிளே ஆஃப் வாய்ப்பையும் உறுதி செய்துள்ளது.
Trending
இந்நிலையில் வெற்றி குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி கூறுகையில், “கடந்த ஆண்டு நாங்கள் தொடர்ச்சியான தோல்விகளை பெற்றபோது மீண்டும் பலமாக திரும்பி வருவோம் என்று கூறியிருந்தோம்.
அதன்படி இந்த ஆண்டு சிஎஸ்கே அணி தொடர்ச்சியான வெற்றிகளை பெற்று வருகிறது. இம்முறையும் நாங்கள் தோல்வியை சந்தித்து இருந்தால் எங்களால் காரணத்தை கூட சொல்லியிருக்க முடியாது. ஆனால் இந்த தொடரில் நாங்கள் சிறப்பாக மீண்டு வந்துள்ளோம். இந்தத் தொடரில் சிஎஸ்கே அணி பெற்ற அனைத்து வெற்றிகளுக்கும் வீரர்களின் கூட்டு முயற்சியே காரணம்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
இந்தப் போட்டியில் கூட மைதானத்தின் தன்மைக்கு ஏற்ப பந்துவீச்சாளர்கள் தங்களது திறனை வெளிப்படுத்தினர். இதுவரை எங்களை நம்பி ஆதரிக்கும் எங்களது ரசிகர்களுக்கு நன்றி. எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் அவர்களின் நம்பிக்கையை நாங்கள் மீண்டும் பெற்றுள்ளது மகிழ்ச்சி” என தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now