
Playing In South Africa Gives Us 'An Upper Hand', Says SA Test Captain Dean Elgar (Image Source: Google)
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டு அணியுடன் முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையே முதல் டெஸ்ட் போட்டி நாளை செஞ்சுரியன் மைதானத்தில் தொடங்குகிறது.
இந்த போட்டி தொடர் இரு அணிகளுக்கும் இடையே எதிர்பார்ப்பு மற்றும் சவால் நிறைந்ததாக இருக்கும் என்று தென்னாப்பிரிக்க டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டன் டீன் எல்கர் தெரிவித்துள்ளார்.
செஞ்சுரியனில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “சர்வதேச அளவில் அவர்கள் முதலிடத்தில் இருக்கலாம். நாங்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சில நேரங்களில் அவர்களுக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஒரு கிரிக்கெட் பார்வையாளராக இதை தெரிவிக்கிறேன்.